தியானப் பாடல்கள் | 400-சுமை சுமந்து சோர்ந்திருப்போரே |
சுமை சுமந்து சோர்ந்திருப்போரே எல்லோரும் என்னிடம் வாருங்கள் (2) சுமைகள் எனக்குத் தாருங்கள் - எனது அன்பில் வாழுங்கள் (2) உள்ளத்தில் தாழ்ச்சியும் அமைதியும் உள்ளவன் என்பதை எண்ணிப் பாருங்கள் பகைவர்களை அன்பு செய்யுங்கள் - உம்மை வெறுப்போர்க்கு நன்மை புரியுங்கள் (2) சபிப்போர்க்கு ஆசி கூறுங்கள் - 2 உம்மை வதைப்போர்க்காய் என்றும் வேண்டுங்கள் (2) எளியவர்க்கு என்றும் உதவுங்கள் - அன்பு இறைமக்களாய் என்றும் திகழுங்கள் (2) ஏழைகளை அன்பு செய்யுங்கள் - 2 அவர் ஏற்றம் பெற என்றும் உழையுங்கள் (2) |