தியானப் பாடல்கள் | 399-சின்ன இதயம் |
சின்ன இதயம் திறந்துள்ளேன் என்னோடு பேசவா உன்மொழி கேட்க வந்தேன் என்னோடு பேசவா என்னுள்ளத்தில் கறையுண்டு குறைகள் பலவுண்டு உம் மொழியில் நிறைவுண்டு இதய சுகமுண்டு இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை என் வாழ்வில் என்றும் நீ துணை என்னுள்ளத்தில் சுமையுண்டு விழிநீர் சோகமுண்டு உன் வரவில் சுவையுண்டு இனிய வாழ்வுண்டு இறைவனே நீரே எந்தன் நம்பிக்கை என் வாழ்வில் என்றும் நீ துணை |