தியானப் பாடல்கள் | 395-சம்மதமே இறைவா |
சம்மதமே இறைவா சம்மதமே தலைவா -உன் மாலையிலே ஒரு மலராகவும் பாலையிலே சிறு மணலாகவும் வாழ்ந்திட சம்மதமே.... இறைவா.... மாறிடச் சம்மதமே சம்மதமே இறைவா தயங்கும் மனதுடைய நான் உனக்காகவே - உன் பணிக்காகவே வாழ்ந்திட வரம் தருவாய் - 2 கருவாக எனைப் படைத்து - உயர் கண்மணியாய் எனை வளர்த்து 2 ; கரமதிலே உருப்பதித்து கருத்துடனே எனைக் காக்கின்றாய் மலையாய் நான் கணித்த பெரும்காரியமும் - உயர் காவியமும் மறைந்தே போனதே - 2 திருவாக உனை நினைத்து உயர் உறவாகவே நெஞ்சில் பதித்து 2 உன் பெயரைச் சாற்றிடவே நலம் தரவே எனை அணைக்கின்றாய் |