Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  394-குறையாத அன்பு  


குறையாத அன்பு கடல் போல வந்து
நிறைவாக என்னில் அலை மோதுதே - அந்த
அலைமீது யேசு அசைந்தாடி வரவே
பல கோடி கீதம் உருவாகுதே

கண்மூடி இரவில் நான் தூங்கும்போது
கண்ணான யேசு என்னைக் காக்கின்றார் - உன்னை
எண்ணாத என்னை எந்நாளுமெண்ணி
மண்ணாகுமென்னை மனம் கொள்கின்றாய்
ஆ ஆ ஆ ஆ ஆ உன்னை
எண்ணாத என்னை மனம் கொள்கிறாய்

அடிவானம் தோன்றும் விடிவெள்ளி என்றும்
தொடர்கின்ற இரவின் முடிவாகுமே - மண்ணில்
துடிக்கின்ற வாழ்வில் வீழ்கின்ற துன்பம்
துடைக்கின்ற இயேசு நிறைவாகுமே
ஆ ஆ ஆ ஆ ஆ மண்ணில்
துடிக்கின்ற வாழ்வின் நிறைவாகுமே

இருள் வந்து சூழ பயம் மேவும் காலை
அருள் தந்து என்னை அணைத்தாளுவாய் - பாவ
சிறை கொண்ட உள்ளம் பாய்கின்றவேளை
சிறை உன்னை வைத்து மீட்பாகினாய்
ஆ ஆ ஆ ஆ ஆ பாவ
சிறை கொண்ட உள்ளம் மீட்பாகினாய்



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்