தியானப் பாடல்கள் | 392-காத்திருக்கும் கண்களுக்கு |
காத்திருக்கும் கண்களுக்கு காட்சியாகக் காலமெல்லாம் நீ வேண்டும் இயேசுநாதா (2) இதயத்தின் துடிப்பினிலே எந்நாளும் - உன் இதமான பெயர் என்றும் கேட்க வேண்டும் (2) பருவத்தின் காலங்கள் எல்;லாம் நான் - உன் உருவத்தின் எழில் ஒன்றே காண வேண்டும் (2) நிலையற்ற இன்பங்கள் நான் மறந்து - உன் நினைவாக எந்நாளும் வாழவேண்டும் (2) குறையற்ற செல்வத்தை நான் இன்று - என் கறைபட்ட இதயத்தில் ஏந்த வேண்டும் (2) முறையில்லா வாழ்வினை நான் துறந்து முறையான உன் பாதை போக வேண்டும் (2) வரையில்லா உன் அன்பு ஆழ்கடலில் கரையோரம் எந்நாளும் வாழவேண்டும் (2) |