தியானப் பாடல்கள் | 391-கவலைப்படாதீர் என்றும் |
கவலைப்படாதீர் என்றும் கவலைப்படாதீர் - 2 உயிர் வாழ எதை உண்பதோ உடலுக்கெதை உடுப்பதென்றோ பறவைகளைப் பாருங்கள் - அவை விதைப்பதுமில்லை அறுப்பதுமில்லை களஞ்சியம் சேர்ப்பதுமில்லை (2) கடவுள் அதற்கும் உணவளிக்கின்றார் - 2 காட்டுச் செடியைப் பாருங்கள் - அவை உழைப்பதுமில்லை நூற்பதுமில்லை அழகிலே இணை அதற்கில்லை (2) கடவுள் அவற்றை உடுத்தி வருகிறார் - 2 இறையரசின் நீதிதனை - முதலில் தேடுவோம் அதை முதன்மையாக்குவோம் உலகினில் வாழ்ந்து காட்டுவோம் (2) கடவுள் நம்மைக் காத்து வருகிறார் - 2 |