தியானப் பாடல்கள் | 390-கவலைப்படவே வேண்டாம் |
ஆ.ஆஆ. கவலைப்படவே வேண்டாம் கலக்கம் கொள்ளவும் வேண்டாம் கரத்தில் தூக்கி நம்மை காக்க கடவுள் தாமே தந்தை தாயாய் அருகிலிருக்கின்றார் நமது தேவை அறிந்துள்ளார் கவலைப்படவே வேண்டாம் உயிர் வாழ எதை உண்போம். உடலை மூட எதை உடுப்போம் என்று கவலை கொள்கின்றீரோ வானத்துப் பறவைகட்கும் வயல்வெளி மலர்களுக்கும் வழங்குபவர் கடவுளல்லவா நம்மை வாழ வைப்பார் உறுதியல்லவா மனக்கவலை பயமுமில்லை மனச்சோர்வில் உயர்வுமில்லை உண்மையிதனை உணர்ந்து கொள்வீரே இறையாட்சியை நாடிடுவோம் ஏற்புடமை தேடிடுவோம் அவனியெங்கும் அழகாகுமே தேடும் அனைத்தும் நமதாகுமே |