தியானப் பாடல்கள் | 389-கலங்காதே திகையாதே |
கலங்காதே திகையாதே வாடாதே வருந்தாதே கடவுள் உந்தன் துணையிருக்கின்றார் துன்பதுயரம் எது வந்தாலும் கலங்காதே துரத்திடும் பகை எது வந்தாலும் கலங்காதே உனக்காக உன்னில் வாழ்கின்றார் உனைக் காக்க உலகில் வாழ்கின்றார் பயம் வேண்டாம் இனி பயம் வேண்டாம் உனைக் காக்க இயேசு உலகில் வாழ்கின்றார் வறுமை வருத்தம் எது வந்தாலும் கலங்காதே வாட்டும் பிணிகள் எது வந்தாலும் கலங்காதே வளமை யாவும் உன்னில் தருகின்றார் வசந்தம் யாவும் உனக்குத் தருகின்றார் பயம் வேண்டாம் இனி பயம் வேண்டாம் உனைக் காக்க இயேசு உலகில் வாழ்கின்றார் |