தியானப் பாடல்கள் | 388-கண்ணாறக் கண்டேனையா |
கண்ணாறக் கண்டேனையா - உம் அருள்தனை கண்ணாறக் கண்டேனையா (2) குறையென்று வருந்திட - என் வாழ்வில் ஏதுமில்லை மறைகளின் தலைவா நன்றி நன்றி வறுமையிலும் செம்மை நெறிகளைத் தந்தாய் வாஞ்சை நிரம்பிய இதயம் தந்தாய் (2) பணத்தால் பொருளால் செழித்திடவில்லை பணிவால் பண்பால் இறைவா உயர்ந்தேன் - 2 குறையென்று... அறிவால் உலகம் உயர்ந்திடச் செய்தாய் அகவொளி ஏற்றி அருள் நலம் தந்தாய் (2) கொடுமதி கொண்டோர் பலர் இருந்தாலும் நல்லோரும் நண்பர்களும் இங்கு குறைவில்லை 2 |