Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  386-கடலில் கரையும்  



கடலில் கரையும் நதிபோல் - எந்தன்
இதயம் உன்னை நாடும் (2)
இயேசுவில் இணைந்துவிட்டேன் - எந்தன்
வாழ்க்கை முழுவதுமே

மரங்கள் அசைந்து பாடிடுதே
உன்னைப் போற்றிடவா
மலர்கள் மலர்ந்து சிரித்திடுதே
உன்னைப் புகழ்ந்திடவா
இயற்கை எல்லாம் உந்தன் தரிசனம்
என்றும் ஆனந்தமே என்னில் ஆனந்தமே

புதிய உலகம் தோன்றிடவே
நீயும் வந்தாயோ
மனித இனத்தைக் காத்திடவே
உம்மைத் தந்தாயோ
உலகம் எங்கும் உந்தன் அருளே
எம்மை மீட்டிடுதே உம்மிடம் அழைத்திடுதே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்