தியானப் பாடல்கள் | 385-கடல் நோக்கி நதிகள் |
கடல் நோக்கி நதிகள் பாயும் ஒளி நோக்கி மலர்கள் சாயும் அகிலமும் படைத்த என் தலைவா எனை நோக்கி வருவதேன் (2) குருவிகள் பறந்திடும் நேரத்திலே ஏணி தேவையில்லை (2) நீரில் மீனினம் நீந்திடவே படகு தேடிச் செல்வதில்லை (2) ஞாலம் தாங்கும் எந்தன் இறைவா என்னை நாடுவதேன் (2) காத்திடும் இமைகள் அருகிருந்தும் விழிகள் காண்பதில்லை (2) நெஞ்சில் உன்னொளி நிறைந்திருந்தும் உள்ளம் ஏனோ உணர்வதில்லை (2) தவறிச் செல்லும் ஆடு நானே என்னைத் தேடுவதேன் (2) |