Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  384-கடல் கடந்து சென்றாலும்  


கடல் கடந்து சென்றாலும் - தீ
நடுவே நடந்தாலும்
புயல் சூழ்ந்து எழுந்திடும் காரிருளை - நீ
கடந்திட நேர்ந்தாலும்
உன்னோடு நானிருப்பேன் - 2
அஞ்சாதே கலங்காதே (2)

தேவனின் பார்வையில் நீ மதிப்புள்ளவன்
பொன் விளை நிலம் போலே
பூமியில் வாழ்ந்திடும் யாவிலும் உன் நிலை
உயர்ந்தது அவராலே (2)
பால் நினைந்தூட்டிடும் - தாய்
மறந்தாலும் நீ அவர் மடிமேலே
மனம் தேற்றுவார் பலம் ஊட்டுவார்
வாழ்வினில் ஒளிதானே அஞ்சாதே கலங்காதே

பாலையில் பாதையும் பாழ்வெளி ஓடையும்
தோன்றிடும் அவர் கையால்
வான்படை ஆண்டவர் வாய் மொழியால் வரும்
மேன்மையை எவர் சொல்வார் (2)
பார்வை இழந்தவர் வாய் திறவாதோர்
யாவரும் நலமடைவார்
இறையாட்சியில் அவர் மாட்சியில்
மானிடம் ஒன்றாகும் அஞ்சாதே கலங்காதே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்