Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  383-ஒவ்வொரு மனிதனும்  


ஒவ்வொரு மனிதனும் என் நண்பன்
ஒவ்வொரு மனிதனும் சகோதரன் - 2 என் சகோதரன்

வறுமையில் வாழ்பவன் என் நண்பன்
வருத்தத்தில் இருப்பவன் சகோதரன்
அல்லல் படுபவன் என் நண்பன்
ஆபத்தில் இருப்பவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் - 2

பிற குலம் சேர்ந்தாலும் என் நண்பன்
பிற இனம் வாழ்ந்தாலும் சகோதரன்
பிறமொழி பேசினாலும் என் நண்பன்
பிற மதம் சார்ந்தாலும் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் - 2

அழகை இழந்தவன் என் நண்பன்
அறிவை இழந்தவன் சகோதரன்
ஊனமாய்ப் பிறந்தவன் என் நண்பன்
ஊமையாய்ப் பிறந்தவன் சகோதரன்
காரணம் அவனும் மனிதன் - 2


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்