Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  382-ஒளியெல்லாம் நீயல்லோ  


ஒளியெல்லாம் நீயல்லோ இயேசையா
வழியெல்லாம் நீயல்லோ இயேசையா ஆ...
ஒளியெல்லாம் நீயல்லோ இயேசையா
தாவீதின் குமரா என் இயேசு நாதா - 4

நீ செல்லும் இடமெல்லாம் - நான்
உன்னைத் தொடர்ந்தேன்
நீ சொல்லும் வார்த்தைகளால் - நான்
உன்னை அடைந்தேன்
தாவீதின் குமரா என் இயேசு நாதா - 2
உன் பின்னே வருவோர்க்கு உன் ஆசீர் தருவாய்
உன் பாதம் அடைவோர்க்கு நல்வாழ்வு தருவாய்
தாவீதின் குமரா என் இயேசு நாதா - 4

என்னிடம் வாருங்கள் - என்று
நீர் மொழிந்தீரே
உம்மிடம் ஓடி வந்தேன் - என்னை
நீர் காப்பீரே
தாவீதின் குமரா என் இயேசு நாதா - 2
இவ்வாழ்வின் இறுதியில் உம்மோடு இணைந்திட
நானுந்தன் சொல்கேட்டு நல்வாழ்வு வாழ்வேன்
தாவீதின் குமரா என் இயேசு நாதா 4


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்