Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  379-ஓருபோதும் மறவாத  


ஆ..ஆ..ஆ....ஆஆஆ
ஓருபோதும் மறவாத இறைவா- உன்னை
ஒருநாளும் பிரியாத வரம் தா (2)
தணியாத தாகம் என் மீது உனக்கு
தனியாகத் தவிப்பது எதற்கு - நான்
தனியாகத் தவிப்பது எதற்கு -
ஓருபோதும் மறவாத இறைவா- உன்னை
ஒருநாளும் பிரியாத வர-ம் தா

துவண்டு நான் விழுகின்ற நே-ரம் - என்னை
உன் தோளில் சுமப்பதும் நீயே
வருந்தி நான் அழுகின்ற வே--ளை - எந்தன்
கண்ணீரைத் துடைப்பதும் நீயே
கனி தரும் சோலையில் எனை நடத்தி - உன்
கண்ணுக்குள் எனை வைத்துக் காப்பதும் நீயே
வாழ்வும் வளமும் நீயே தாழ்வும் தளர்வும் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே

நீரின்றிக் காய்ந்திடும் நிலமாய் - நான்
நீயின்றி வாடிடும் போது
அருவியாய் நீ என்-னில் பா-ய்-ந்து - என்
ஆன்மாவைக் குளிர்ந்திடச் செய்வாய்
மறந்திடும் உறவுகள் இருந்தாலும் - உன்
மன வீட்டில் எனை வைத்து நேசிப்பதும் நீயே
வாழ்வும் வளமும் நீயே தாழ்வும் தளர்வும் நீயே
நீயே நீயே நினைவெல்லாம் நீயே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்