தியானப் பாடல்கள் | 378-ஒரு போதும் உனைப் |
ஒரு போதும் உனைப் பிரியா நிலையான உறவொன்று வேண்டும் - என் உடல் கூட எரிந்தாலும் உன் நாமம் நான் சொல்ல வேண்டும் நினைவிலும் நீயே என் கனவிலும் நீயே 2 நீங்காத நிழலாக வா இறைவா உன் கையில் என்னை நீ பொறித்தாய் பெயர் சொல்லி அன்பாய் என்னை அழைத்தாய் 2 ஏன் என்னை நீ தெரிந்தாய் என் வாழ்வில் ஏன் நுழைந்தாய் - 2 உன் மாறாத அன்பில் மகிழ்வொன்று கண்டேன் - தாய் உறவொன்று தேடும் பிள்ளைபோல் நின்றேன் உன்னோடு நான் வாழுவேன் நீர் தேடும் மான் போல் தேடி வந்தேன் நீயின்றி வாழ்வில்லை என்றுணர்ந்தேன் 2 என்னுள்ளே வாழும் தெய்வம் என்னை நீ ஆளும் தெய்வம் - 2 என்யேசு நீயே என் உள்ளம் நின்றாய் - நிதம் என் பாதை முன்னே நீதானே சென்றாய் உன்னோடு நான் வாழுவேன் |