Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  377-ஒரு தரம் ஒரே தரம்  


ஒரு தரம் ஒரே தரம்
இதயத் தூய்மை வேண்டும்
இறைவரம் நிரந்தரம் உதயம்
காண்பேன் மீண்டும் (2)
முறிந்த உறவு துளிர
காய்ந்த இதயம் குளிர
மனதில் அமைதி நிலவ
தூய அன்பு மலர - 2

இருளில் பிறந்து அருளில் வளர்ந்து
மகனாய் வாழ்ந்த காலம் - இன்று
பிரிந்து திரிந்த காலம் (2)
இனியொரு தரம் இறைவனின் கரம்
விலகிடின் என்ன சுகம்
சொல் மனமே சொல் மனமே

உலக வாழ்வில் உறவும் பிரிவும்
விலக்கு இல்லா நியதி - அதை
மறுப்போர் இல்லை உறுதி (2)
தினம் அவர் தரும் உறவினில் வரும்
சுகமோ என்ன சுகம்
என் மனமே என் மனமே


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்