தியானப் பாடல்கள் | 376-ஒரு கணமும் எனைப் |
ஒரு கணமும் எனைப் பிரியாமல் என்னோடு தங்கும் ஆண்டவரே உம்மை நான் பிரிந்து சென்றாலும் என்னோடு தங்கும் ஆண்டவரே என்னோடு தங்கும் - 3 ஆண்டவரே (2) நீர் இல்லை என்றால் வாழ்வினில் எழுச்சியில்லை என்னை நீர் பிரிந்தால் இருளினில் வாடுகின்றேன் (2) பொழுது சாய்கின்றது இந்த நாளும் முடிகின்றது - 2 வழியிலே சோர்ந்து விழுந்திடாமல் எனது ஆற்றலை புதுப்பித்திட - என்னோடு... என்னில் நீர் இருந்தால் வலிமை பிறக்கின்றது உமது அருளால் துன்பங்கள் மறைகின்றது (2) உம் தெய்வீக ஆறுதலால் என்னைப் பலப்படுத்தும் - 2 என் முழு உள்ளத்தினால் உம்மையே நான் தினம் நேசித்திட - என்னோடு... |