தியானப் பாடல்கள் | 374-எழுந்திடும் நினைவிலெல்லாம் |
எழுந்திடும் நினைவிலெல்லாம் நிறைந்தவன் இறைவனம்மா எழுதிடும் எழுத்திலெல்லாம் கலந்தவன் கடவுளம்மா இகபரம் ஆள வந்த இறைமகன் இயேசம்மா அகமலர் வீற்றிருந்து ஆண்டிடும் அரசனம்மா உவகையில் நிறைந்திருந்து உறவுகொள் இறைவனம்மா பவநிலை கடந்த ஞானத் தவநிலைத் தலைவனம்மா கொடுமனம் பிழிந்து பஞ்சு பதமனம் தருவானம்மா விடுதலை அளித்து வாழ்வில் முடிநிலை அருள்வானம்மா திருவுடை முருகு பொங்க நடந்திடும் கலைஞனம்மா அருகிலே அணைத்து நம்மை நடத்திடும் துணைவனம்மா இறைஞ்சிய அடியருக்கு இரங்கிடும் விழிகளம்மா மறைந்தவர் நெடிதுவாழ மறு உயிர்ப் பெருக்கு அம்மா |