தியானப் பாடல்கள் | 373-எனைத்தாங்கும் என் |
எனைத்தாங்கும் என் தெய்வமே உடன் வாழ எனில் வாருமே நீங்காத உறவாகவே நிழலாக உடன் வாருமே அன்பே! உன் திருப்பாதம் அமர்ந்திட வந்தேன் எனை உமதருள் நிறைந்திட வருவாய் என் இதயத்துள் உறைந்திடுவாய் திடமாய்! நான் வாழ்ந்திடத் துணைபுரிவாய் தீராத துன்பங்கள் எனை வாட்டும்போது தாயாக எனைத் தாங்க நீ வேண்டுமே தீர்விலாக் குழப்பங்கள் எனைச் சூழும்போது தந்தையாய் எனைத் தாங்க நீர் வேண்டுமே பிறர் எனைத் தவறாக புரிந்திடும்போது 2 தோழனாய் தோள் தாங்க நீ வேண்டுமே நியாயங்கள் நிலைமாறித் தடுமாறும்போது நீதியை நிலைநாட்டும் மனம் வேண்டுமே உரிமைகள் உருமாறி விலைபோகும்போது களம் நின்று போராடும் மனம் வேண்டுமே பகைபழி காயங்கள் சூழ்ந்திடும்போது - 2 உண்மையாய் உன்னிலே நான் வாழுவேன் |