தியானப் பாடல்கள் | 372-எனக்காகத் தானே நீ |
எனக்காகத் தானே நீ எல்லாம் செய்தாய் எனக்கென்று அழகான உலகம் செய்தாய் என்னோடு உறவாட உயிர்கள் செய்தாய் எனை மீட்கத்தானே நீ உயிரும் தந்தாய் தேவா நான் உனக்கென்ன செய்வேன் ஐயா உன் அன்பிற்குச் சான்றாக வாழ்வேன் ஐயா உறவுகள் ஆயிரம் நீயும் தந்தாய் உன் பாதம் அமர்கின்ற வரமும் தந்தாய் சிறகுகள் தந்து நீ வானம் தந்தாய் சிலுவைகள் தந்து நீ ஞானம் தந்தாய் இருளான பாதையில் நிலவைத் தந்தாய் எரிகின்ற பாலையில் மேகம் தந்தாய் ஒருகோடி கனவுகள் எனக்குத் தந்தாய் உயிரூட்டும் உணவாகி உனையே தந்தாய் பூக்களை ரசிக்கின்ற பார்வை தந்தாய் முட்களில் நடக்கின்ற பாதம் தந்தாய் இதயத்தின் ஆழத்தில் ஈரம் தந்தாய் இதமாக சுமக்கின்ற பாரம் தந்தாய் |