தியானப் பாடல்கள் | 371-என்னோட யேசுவே |
என்னோட யேசுவே கொஞ்ச நேரம் பேசுமே ஆசையாய் இருக்குதையா உன் அருகில் நானும் அமர்ந்து என் கதையைச் சொல்ல வேணும் எப்போதும் நான் இருக்கேன் என்று சொல்ல நீவேணும் நான் திரும்புகிற திசையெல்லாம் உன் உருவம் தெரிய வேணும் திரும்பாத சொந்தமாக நீமட்டும் எனக்கு வேணும் உன் கையைப் புடிச்சு நானும் காலாற நடக்க வேணும் கலங்குகிற என் கண்ண உன் கரமே துடைக்க வேணும் |