Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  370-என்னோடு நீ பேச வந்தாய்  

என்னோடு நீ பேச வந்தாய்
என் வாழ்வை நீ மாற்றி நின்றாய் - 2
என் தெய்வமே என் தெய்வமே
நீயின்றி நான் இல்லையே
உன் நினைவின்றி வாழ்வில்லையே

இதய தாகம் நீ இருளில் தீபம் நீ
உதய காலம் நீ உறவின் பாலம் நீ
தள்ளாடி நான் தடுமாறினேன் கண்மூடி நான்
வழி மாறினேன் தீராத துன்பங்களில் - நீ
தாயாக தாலாட்டினாய்

உயிரின் தீபம் நீ உலகின் வேதம் நீ
மழையின் மேகம் நீ மலரின் மணமும் நீ
என் பாதையில் முன் போக வா
கண்போலவே எனைக் காக்க வா
ஆதாராம் நீயாகவே உன்
அன்பொன்றே எனதாகவே

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்