தியானப் பாடல்கள் | 368-என்னை நேசிப்பதேன் இறைவா - 2 |
என்னை நேசிப்பதேன் இறைவா - 2 இந்த ஏழையிடம் நீர் எதைக் கண்டீர் உன் ஏராள அன்பால் நெஞ்சம் நெகிழுதே நேசிப்பதேன் இறைவா என்னை நேசிப்பதேன் இறைவா நீரில்லா சுடுமணல் வெளியில் துணையில்லாத வழிப்பயணம் - 2 பரிவுடன் நீ எனைப் பார்த்தாய் பாசத்துடன் என் கரம் பிடித்தாய் உனக்காய் வாழ எனை அழைத்தாய் உந்தன் சிறகில் எனைச் சுமந்தாய் அன்பே அன்பே ஆருயிரே - என்னை ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஆ ஈரமில்லா நிலமாக வரண்ட வாழ்வு வாழ்ந்திருந்தேன் - 2 மண்ணை நனைக்கும் மழையாக மனதை நீயும் குளிர வைத்தாய் நினைவுகள் எல்லாம் நீயானாய் நிம்மதி வாழ்வில் நீ தந்தாய் அன்பே அன்பே ஆருயிரே - என்னை |