தியானப் பாடல்கள் | 366-என்னைச் சுமப்பதனால் |
என்னைச் சுமப்பதனால் இறைவா - உன் சிறகுகள் முறிவதில்லை அள்ளி அணைப்பதனால் இறைவா - உன் அன்பு குறைவதில்லை ஆயிரம் மின்னல் இடித்திட்டபோதும் வானம் கிழிவதில்லை ஆயிரம் மைல்கள் கடந்திட்டபோதும் நதிகள் அழுவதில்லை கருவைச் சுமக்கும் தாய்க்கு என்றும் குழந்தை சுமையில்லை கருவிழி சுமக்கும் இருவிழி அதற்கு இமைகள் சுமையில்லை மதுவைச் சுமக்கும் மலர்களுக்கென்றும் பனித்துளி சுமையில்லை வானைச் சுமக்கும் மேகத்திற்கென்றும் மழைத்துளி சுமையில்லை அகழும் மனிதரைத் தாங்கும் பூமிக்கு முட்கள் சுமையில்லை இகழும் மனிதரை இரங்கும் மனதிற்;கு சிலுவைகள் சுமையில்லை உலகின் பாவம் சுமக்கும் தோள்களில் நானொரு சுமையில்லை உயிரை ஈயும் உன் சிறகின் நிழலினில் இதயம் சுமையில்லை |