தியானப் பாடல்கள் | 357-என்னை உனது கருவியாய் |
என்னை உனது கருவியாய் மாற்றிடு இறைவா மண்ணில் உன் திருவுளம் நான் வாழ்ந்திட வேண்டும் குயவன் கை களிமண் எனை வரைந்து உன் உருவும் சாயலும் தந்திடு இறைவா கல்லான இதயம் எடுத்து விட்டு புது இதயம் தா இறைவா எளியோரில் உந்தன் திருச்சாயல் காணும் புதுப்பார்வை தா இறைவா துயரத்தில் என்னைச் தூக்கிச் சுமக்கும் உன் தோள்கள் தா இறைவா நற்செய்தி அறிவிக்கும் பேறு பெற்ற பாதங்கள் தா இறைவா நோய் நீக்கி என்னைக் குணமாக்கும் உந்தன் திருக்கரம் தா இறைவா நீதிக்குத் துணையாகும் இறைவாக்கைச் சொல்ல உன் நாவு தா இறைவா |