தியானப் பாடல்கள் | 363-என்னை அனுப்பும் தெய்வமே |
என்னை அனுப்பும் தெய்வமே - உம் மக்களின் விடுதலைக்காய் (2) என்னைத் தேர்ந்ததுவும் நீதான் என்றால் என்னை அழைத்ததுவும் நீதான் என்றால் (2) நான் சிறுவன் என்றேன் சொல்லாதே என்றாய் ஐயோ பயம் என்றேன் அஞ்சாதே என்றாய் (2) பேசவும் தெரியாது என்றேன் பேசுவதோ நீ என்றாய் அசுத்த உதடுகள் என்றேன் அன்பின் தீயினால் சுட்டுவிட்டாய் என் சொற்களை உன் வாயில் வைத்துள்ளேன் பிடுங்கவும் தகர்க்கவும் அழிக்கவும் கவிழ்க்கவும் கட்டவும் நடவும் இன்று நான் உன்னைப் பொறுப்பாளனாக ஏற்படுத்தியுள்ளேன் நான் கலங்கி நின்றேன் கலங்காதே என்றாய் நான் தயங்கி நின்றேன் ஏன் தயக்கமென்றாய் (2) பாதையும் தெரியாது என்றேன் பாதையுமே நீ என்றாய் தகுதிகள் எனக்கில்லை என்றேன் உந்தன் ஆவியால் என்னைத் தொட்டுவிட்டாய் என்னை அனுப்பும்... |