தியானப் பாடல்கள் | 362-என்னுள்ளம் கவியொன்று |
என்னுள்ளம் கவியொன்று பாடும் - அது என் தேவன் உனைத் தேடும் தேனும் இசையும் போல தேடிய இன்பம் போல என் தேவன் உனில் வாழும் மானிலத்தின் படைப்பினிலே உன்னை நானறிந்தேன் மலர்களின் புன்னகையில் உன்னெழில் நானுணர்ந்தேன் மழலை குழந்தை எழிலினிலே மாந்தர் மனதில் அன்பினிலே - 2 மன்னவா உனைக் கண்டேன் மாபெரும் மகிழ்வடைந்தேன் நண்பர்கள் அன்பினிலே உன் சுவை தானுணர்ந்தேன் பண்களின் இசையினிலே உன் சுவை தானுணர்ந்தேன் - 2 பணிகள் ஆற்றும் கரங்களிலே பகிர்ந்திடும் அன்பரின் குணங்களிலே - 2 பரமனே உனைக் கண்டேன் பக்தனாய் மாறிவிட்டேன் |