Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

தியானப் பாடல்கள்  360- என் வாழ்வின் ஆதாரம்  

என் வாழ்வின் ஆதாரம் - என்
இயேசு நீர்தானய்யா
எனையாளும் என் மன்னவா - என்
வாழ்வின் துணையாக வா (2)

சூரியன் இல்லையென்றால் நிலவின் கதியென்ன
எல்லாமுமே எனக்கு நீ இனியும் குறை என்ன
கடலின் ஆழம் போலவே
கருணை மிகுந்தவரே
காலை நேர தென்றலாக
கனிவோடு என்னுள் வாருமே

மலருக்கு மணமாக பயிருக்கு மழையாக
எனக்குள்ளே உயிராக இருக்கும் வல்லவரே
நானிலம் காக்கும் நல்லவரே
நானுந்தன் செல்லப்பிள்ளை
எனக்குத் துணையாய் நீயிருக்க
என்னைச் சூழ்ந்து அன்பே வாரும்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்