தியானப் பாடல்கள் | 358-என் நெஞ்ச வீட்டினில் |
என் நெஞ்ச வீட்டினில் கோவில் கொண்டு வாழ்ந்திடும் எனது நல்ல மீட்பர் இயேசுவே கோடி கோடி ராகங்கள் கொஞ்சும் தமிழில் பாடியே காலமெல்லாம் புகழ்ந்து ஏத்துவேன் இதயதெய்வமே உம்மைப் போற்றுவேன் இனிய நேசரே உம்மை வாழ்த்துவேன் என்னிடம் இருப்பதெல்லாம் என் இயேசு நீர் தந்தது என் உயிர் இருப்பதுவும் என் மீட்பர் நீர் தந்தது என்ன சொல்லி நான் உம்மைப் பாடுவேன் என் நெஞ்சத்தை உம் கோவிலாக்குவேன் இதய தெய்வமே எத்தனை அதிசயங்கள் என் வாழ்வில் காண்கிறேன் என்றுமே உன் அன்பினை எண்ணியே மகிழ்கின்றேன் என் சொந்தமே என் உயிரே உன் நினைவே என் மகிழ்வே |