தியானப் பாடல்கள் | 357-என் நிழலாக வந்தாலும் |
என் நிழலாக வந்தாலும் சரி என் நிஜமாக வந்தாலும் சரி என் மனதில் நிற்கின்ற நிழலே உன்னை நிஜத்தில் காண்பதெப்பொழுது எந்தன் நெஞ்சினில் நிழலிடும் நிழலே உன்னை நேசமாய் வைப்பதெப்பொழுது நீ நிழலாக வந்தாலும் சரி நிஜமாக வந்தாலும் சரி (2) நேசிப்பேன் தினம் உன்னை உன் கைகளிலே தெரிகின்றேன் இறைமகனே என் பேரினிலே வருகின்ற முகவரி நீ (2) உன்னதத்தில் திளைக்கும் உன்னத முகமே - 2 நேசமாய் என்னை நோக்கியே வா வா (நீ நிழலாக...) என்னைக் கருவினிலே தெரிந்திட்ட பெருமகனே என் உயிரினிலே கலந்திட்ட என் இறையே (2) மழலையின் சிரிப்பில் மனதும் மாற - 2 யேசுவே என்னை நோக்கியே வா வா (நீ நிழலாக...) |