Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  356-என் கரம் பிடித்து  



என் கரம் பிடித்து எனை நடத்து
என்னுடன் நடந்து வழிநடத்து (2)
வருவாய் இயேசுவே வழித்துணையே
என் வாழ்க்கைப் பயணம் முழுவதுமே

இருளின் ஆட்சித் தொடங்கி விட - என்
இதயம் சோர்ந்து தளர்ந்து விட (2)
என்னுடன் நீயும் இல்லாமல் - வேறு
எங்கோ போவது சரிதானா - 2

என்னுடன் நீயும் நடந்து வந்தால் - இங்கு
எல்லாம் அழகாய் மாறிவிடும் (2)
என்னுடன் நீயும் இல்லை என்றால் - என்
உலகே இருளில் மூழ்கி விடும் - 2

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்