தியானப் பாடல்கள் | 355-என் வாழ்வில் யேசுவே |
என் வாழ்வில் யேசுவே எந்நாளும் இங்கே எல்லாமும் நீயாக வேண்டும் - எந்தன் எல்லாமும் நீயாக வேண்டும் சோகங்கள் ஆறாமல் நான் வாடும்போது தாயாக நீ மாற வேண்டும் - அன்புத் தாயாக நீ மாற வேண்டும் பாரங்கள் தாங்காமல் சாய்கின்றபோது பாதங்கள் நீயாகவேண்டும் - எந்தன் பாதங்கள் நீயாக வேண்டும் - 2 பாவங்கள் கடலாகி நான் மூழ்கும்போது ஓடங்கள் நீயாக வேண்டும் - வரும் ஓடங்கள் நீயாக வேண்டும் காலங்கள் தோறும் என் நெஞ்ச வீட்டில் தீபங்கள் நீயாக வேண்டும் - சுடர் தீபங்கள் நீயாக வேண்டும் - 2 தாகங்கள் தீராமல் நான் ஏங்கும்போது மேகங்கள் நீயாக வேண்டும் - மழை மேகங்கள் நீயாக வேண்டும் போராட்டம் சூழ்ந்தென்னை தீவாக்கும்போது பாலங்கள் நீயாக வேண்டும் - இணைப் பாலங்கள் நீயாக வேண்டும் தீராத ஆர்வத்தில் நான் தேடிப் பயிலும் பாடங்கள் நீயாக வேண்டும் - மனப் பாடங்கள் நீயாக வேண்டும் வாராத ஆனந்தம் வந்தென்னில் சூழ கீதங்கள் நீயாக வேண்டும் - புதுக் கீதங்கள் நீயாக வேண்டும் சீரான எண்ணங்கள் தமிழாகும் போது இராகங்கள் நீயாக வேண்டும் - சுவை இராகங்கள் நீயாக வேண்டும் |