தியானப் பாடல்கள் | 354-என் வாழ்வில் எல்லாமே |
என் வாழ்வில் எல்லாமே யேசுதான் இந்நாள் எந்நாளும் யேசுதான் என் முன்னும் என் பின்னும் யேசுதான் என் மூச்சிலும் பேச்சிலும் யேசுதான் விண்ணிலிருந்து மண்ணில் வந்தவர் யேசுதான் என்னை மீட்கத் தன்னைத் தந்தவர் யேசுதான் - 2 அவர் நாமம் நான் பாட - 2 அன்பு காட்டி ஆற்றல் தந்தவர் யேசுதான் ஆற்றலனைத்தும் எனக்குத் தந்தவர் யேசுதான் ஆட வைத்துப் பார்த்து நிற்பதும் யேசுதான் - 2 அன்புத் தாயாய் என்னைச் சேயாய் - 2 காலமெல்லாம் காத்து நிற்பவர் யேசுதான் |