Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

 இறைவனில் சங்கமம்

 தியானப் பாடல்கள்  352-என் தேவனே என் இறைவனே  

என் தேவனே என் இறைவனே உன்னை
எந்நாளும் போற்றிடுவேன் - உன்னை
எந்நாளும் பாடிடுவேன்

கண்ணிழந்தோர் பார்த்திடக் கண்டேன் - இறை
யேசுவின் கருணை அதில் கண்டேன் - 2
விண்ணிழந்தோர் அதைப் பெறக் கண்டேன் - 2
இறை யேசுவின் மனதை அதில் கண்டேன்

உடலில் ஒளி வீசிடக் கண்டேன் - இறை
யேசுவின் மகிமை அதில் கண்டேன் - 2
கடல்களிலே பெரும் அமைதி கண்டேன் - 2
இறை யேசுவின் தன்மை அதில் கண்டேன்

தன்னுடலை அளித்திடக் கண்டேன் - இறை
யேசுவின் இதயம் அதில் கண்டேன் - 2
தன்னுயிரைத் தந்திடக் கண்டேன் - 2
இறை யேசுவின் ஈகை அதில் கண்டேன்

எளியவரும் மகிழ்ந்திடக் கண்டேன் - இறை
இயேசுவின் இன்பம் அதில் கண்டேன்
ஓளிவிளக்காய் திகழ்ந்திடக் கண்டேன் - இறை
இயேசுவின் தூய்மை அதில் கண்டேன்

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்