Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  350-என் தெய்வம் வாழும் பூமியிது  



என் தெய்வம் வாழும் பூமியிது
எத்துணை அழகு இது - 2
உலகே கண்கள் திறவாயோ
உவகை இன்று காணாயோ

பரந்து விரிந்த உலகம்
படைத்தவன் அன்பு இதயம்
உயர்ந்து விரிந்த வானம்
பரந்த அவர் மனம் கூறும்
எங்கெங்கும் வீசிடும் தென்றல் காற்றும்
பொங்கிடும் நீரின் ஊற்றும்
மின்னிடும் மீன்களும் ஒளிதரும் கதிரும்
மின்னலும் தன்ணொளி நிலவும்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு - 2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப் பருகு

நிறைந்த அன்புடைய நெஞ்சம்
நிலவென ஒளி தரும் அறிவும்
மலர்ந்த முகம் தரும் அழகும்
மங்கா கலைகளின் வளமும்
என்றென்றும் உழைக்கும் தன்மான மாந்தர்
எங்கெங்கும் ஒன்றாகும் கரங்கள்
நீதிக்கும் நேர்மைக்கும் போராடும் குரல்கள்
நிம்மதி தேடிடும் மனங்கள்
என்னென்ன அழகு எங்கெங்கும் மெருகு - 2
இயற்கையை அணுகு இன்பம் அள்ளிப் பருகு

 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்