தியானப் பாடல்கள் | 345-என் இயேசு நாதனைப் பாட |
என் இறைவா உனை நான் மறவேன் என்றும் உந்தன் அன்பில் வாழ்வேன் (2) பொருள் கொண்டு வாழ்ந்த நேரம் கூடி வந்த சொந்தம் கோடி (2) வழியிழந்து வாழ்ந்த நேரம் ஓடிவிட்ட உறவும் கோடி நண்பனாய் நீயிருந்து கரம் சேர்த்து பலம் தந்தாய் தாயாக நீயும் வந்து நெஞ்சொடு அணைத்துக்கொண்டாய் நானும் உந்தன் நெஞ்சின் ஓரம் வாழுகின்ற காலம் யாவும் இருந்திடும் நிலை வேண்டும் தொழுதிடும் அருள் வேண்டும் - 2 தந்துவிடும் பொழுதெல்லாம் மகிழ்கின்ற நெஞ்சம் யாவும் (2) தேவையென்று தேடும் நேரம் மகிழ்ந்திடும் மனிதம் யாவும் வள்ளலாய் நீயிருந்து வரம் தந்து வாழ வைத்தாய் சொல்லிட வார்த்தையில்லா உறவென்று நீயுமானாய் நானும் உந்தன் நெஞ்சின் ஓரம் வாழுகின்ற காலம் யாவும் இருந்திடும் நிலை வேண்டும் தொழுதிடும் அருள்; வேண்டும் - 2 |