தியானப் பாடல்கள் | 347-என் இயேசுவே உன்னை |
என் இயேசுவே உன்னை நான் மறவேன் மறவேன் எந்நாளும் உன்னருளை நான் பாடி மகிழ்ந்திடுவேன் உன் நாமம் என் வாயின் நல்தேனாய் இனிக்கிறது 2 உன் அன்பை நானும் எண்ணும்போது ஆனந்தம் பிறக்கிறது உன் வாயில் சொல்லமுதாய் எந்நாளும் வாழ்ந்திடுவேன் - 2 நல் வாழ்வு நல்கும் வார்த்தையெல்லாம் நானிலம் முழங்கிடுவேன் உன் மேனி பாய்ந்துவரும் செந்நீராய் நானிருப்பேன் - 2 பிறர் வாழ்வு காண நானும் ஒரு நாள் ஆறாய்ப் பாய்ந்திடுவேன் என் ஆசை ஆயிரமாம் உன்னாலே நிறைவு பெறும் - 2 என் பாச வலைகள் நாசக் கனிகள் உன்னால் அறுந்துவிடும் நல் காலை (மாலை) வேளையிலே நலம்கூற எழும் கதிர் (மதி)போல் - 2 என் வாழ்வின் காலை (மாலை) வந்திடும்போது எழும் கதிர் (மதி) நீயாவாய் |