Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  341-என் ஆற்றல் என்கோட்டை  


என் ஆற்றல் என்கோட்டை
என் அடைக்கலம் அரண் அவரே
என் கேடயம் என் வலிமை
என் உடன்வரும் துணை அவரே

       அவர் நிழலினில் நடந்திடுவேன்
       வரும் கவலைகள் மறந்திடுவேன்
       பெரும் மகிழ்வால் நிறைந்திடுவேன்
       நான் மலையென உயர்ந்திடுவேன்

இறைவனைத் தேடும் மனம்
என்றும் கவலையில் ஆழ்வதில்லை
அவர் தரும் வலிமையினால்
மனம் வலியினில் வீழு;வதில்லை
அவர் நம் நடுவில் தங்குவதால்
அவர் நம் சுமைகளைத் தாங்குவதால்
கலக்கங்கள் இனியில்லை
வீண் கவலைகள் துளியில்லை.

அன்பில் வாழும் மனம்
என்றும் அச்சம் அடைவதில்லை
அன்பின் உறுதியினால்
அது என்றும் உடைவதில்லை
இறைவன் அன்பாய் இருப்பதனால்
இதயத்தில் அவரே உறைவதனால்
இனி அச்சம் எனக்கில்லை
அதன் மிச்சம் துளியில்லை


 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்