தியானப் பாடல்கள் | 340-என் ஆத்துமம் ஆண்டவரை |
என் ஆத்துமம் ஆண்டவரை மகிமைப்படுத்துகின்றது என் மீட்பராம் இறைவனிடம் என் மனம் மகிழ்கின்றது தன் அடிமை தாழ்மையினை அவர் கருணைக்கண் கொண்டதினால் இதோ எல்லாத் தலை முறைகளும் இனியென்னைப் பாக்கியவதி என்பார் ஏனெனில் வல்லபமுள்ளவர் எனக்குப் பெரியன புரிந்தார் அவர் பெயர் புனிதமானதாம் அவருடைய கிருபையும் தலை முறை தலை முறையாய் அவருக்குப் பயந்து நடப்போர்க்கு தன் கரத்தின் வலிமையைக் காட்டி இருதய சிந்தனையில் கர்வமுள்ளவர்களைச் சிதறடித்தார் வல்லபமே உள்ளோரை - அவர் இருக்கையில் இருந்து தள்ளித் தாழ்ந்தோரை உயர்த்தினார் பசித்தே தான் இருப்பவரை அவர் நன்மைகளால் நிரப்பி தனவான்களை வெறுமையாக அனுப்பினார் தன் கிருபையை நினைவு கூர்ந்து தம் தாசரான இஸ்ராயேலைக் காத்திட்டார் தம் பிதாப் பிதாப்பிதாக்களாம் ஆபிரகாமுக்கும் ஊழியுள்ள காலம் அவரது வித்துக்கும் அவர் தந்த வாக்குறுதி அதுவேயாம் பிதாவுக்கும் சுதனுக்கும் பரிசுத்த ஆவிக்கும் ஸ்தோத்திரம் உண்டாவதாக ஆதியிலிருந்ததுபோல இப்பொழுதும் எப்பொழுதும் அநாதி சதாகாலமும் இருக்கும்படியாக ஆமேன் |