தியானப் பாடல்கள் | 338-எழுந்து நடந்திட வேண்டும் |
எழுந்து நடந்திட வேண்டும் - 2 - உன் வாழ்வின் சுமையை தோளில் சுமந்து எழுந்து நடந்திட வேண்டும் - மனமே துணிந்து நடந்திட வேண்டும் பொன்னுமில்லை பொருளும் - இல்லை எந்தன் கையிலே என்னுள் உறையும் இறைவன் - தந்திடும் உறுதி நெஞ்சிலே (2) அந்த உறுதி தந்த துணையில் நானும் துணிந்தே செல்கிறேன் (2) உன்னுள் அந்த தீபம் உண்டு துணிந்தே செல்லுவாய் - 2 விழுகின்ற விதைதான் தளிராய் - மலரும் இது தான் உண்மையே விழுவதும் எழுவதும் வாழ்வின் - நியதி உணர்ந்தால் நன்மையே (2) எந்த இலட்சிய வாழ்விலும் இந்நிலை தொடரும் உணர்வாய் உள்ளமே (2) உறுதியில் நிலைத்து வாழ்வை எதிர்கொள் உயிர்ப்பாய் திண்ணமே - 2 |