தியானப் பாடல்கள் | 337-எளிய உள்ளம் படைத்த |
எளிய உள்ளம் படைத்த நாமும் பேறுபெற்றவரே இறை அரசு என்றும் - ஏழைகள் நமக்கே பேறுபெற்றோமே (2) துயரம் தாங்கும் சமூகம் நாமும் பேறுபெற்றவரே தந்தை இறைவன் ஆறுதல் தருவார் பேறுபெற்றோமே (2) சாந்தமுள்ள மாந்தர் நாமும் பேறுபெற்றவரே - இந்த மண்ணின் மைந்தர் என்றும் - நாமே பேறுபெற்றோமே (2) நீதிக்காக ஏங்கும் நாமும் பேறுபெற்றவரே நிறைவு கண்டு நிலைத்து வாழ்வோம் பேறுபெற்றோமே (2) இரங்கும் நெஞ்சம் கொண்ட நாமும் பேறுபெற்றவரே இறைவன் இரக்கம் நம்மில் - நிறையும் பேறுபெற்றோமே (2) |