தியானப் பாடல்கள் | 334-எந்தன் உள்ளம் - ஆண்டவரை |
எந்தன் உள்ளம் - ஆண்டவரை போற்றிப் பெருமைப்படுத்துகின்றது எந்தன் மீட்பராம் - வல்ல தேவனை நினைத்து நாளும் மகிழுகின்றது ஏனெனில் - அவர் தம் அடிமையின் தாழ்நிலையை கடைக்கண் நோக்கினார் இதுமுதல் - எல்லாத் தலைமுறையும் - என்னை பேறுடையாள் என்று போற்றுமே வல்லவராம் கடவுள் எனக்கு வியத்தகு செயல் புரிந்துள்ளார் அவர்க்கு அஞ்சி நடப்பவர்க்கு இரக்கம் காட்டி வருகின்றார் தூயவர் - அவர் திருப்பெயராம் ஏனெனில் - அவர் வலிமையை தலைமுறையாயக் காட்டி வருகின்றார் மனதிலே - மிகுந்த செருக்குடனே சிந்திப்போரை சிதறடிக்கின்றார் வலியவரை அரியணையில் நின்று தூக்கி எறிந்துள்ளார் தாழ்ந்தவரை உயர்த்தினார் பசித்தவர் நலம் தேற்றினார் செல்வரை - வெறுமையாக்கினார் |