தியானப் பாடல்கள் | 333-எந்தன் இயேசுவே |
எந்தன் இயேசுவே உம்மைப் போற்றுவேன் - என் உயிரும் உடலும் இருப்பது உமக்காக தாகம் கொண்டேன் உம் இரக்க மழைக்காக தாவி வந்து அணைத்துக் கொண்டீர் மகனாக (மகளாக) தந்தையும் தாயும் எனக்கானீர் சொந்தமாக தேடி வந்து உறவு கொண்டீர் மைந்தன் யான் வலிமை பெறுமாறு ஆவியின் கொடைகளால் நிரப்பி விட்டீர் தோளில் சுமந்து துன்பம் நீக்கி காக்கும் தந்தை நீரன்றோ மீனைச் சமைத்து முள் நீக்கி வாயில் ஊட்டிடும் தாய் நீரன்றோ அன்புத் தாய் நீரன்றோ ஏழையும் எளியோரும் வாழ்வு பெற ஏதுமறியா என்னையே தேர்ந்து கொண்டீர் இல்லாதோர் நிறைவு பெறுமாறு இருப்பதைப் பகிர்ந்திடும் பண்பு தந்தீர் உன்னோடு நான் இருக்கின்றேன் சிறுபிள்ளை என்று சொல்லாதே என்று சொல்லி என் வாழ்வை நன்கு உயர்த்திடும் ஏணியாக்கினாய் சுடர் தீபமாக்கினாய். |