தியானப் பாடல்கள் | 331-எந்தன் இதயம் ஏற்றிப் |
எந்தன் இதயம் ஏற்றிப் புகழுதே அந்தமில்லா ஆதி முதல்வனே (2) உள்ளம் களிக்கத் துள்ளி மகிழ்ந்து உலக மீட்பர் புகழைப்பாடி கனிவுக்கடவுள் பணிப்பேன் தாழ்மை கடைக்கண் நோக்கினார் (2) இனி எந்நாளும் இகத்தில் வாழ்வார் (2) என்னைப் போற்றுவார் (2) எல்லாம் வல்லோன் இணையின் வரங்கள் எண்ணலாப் பொழிந்தார் (2) இல்லையெண்ணாது எவர்க்கும் கருணை (2) என்றும் காட்டுவார் (2) வலிமிக்கோரும் நலிந்து வாட மெலிவுற்றோரும் சிறந்து வாழ (2) நிலைத்த செல்வம் குலைந்தே தாழ (2) எளியோர் இன்பம் நிலைக்கச் செய்தார் (2) |