தியானப் பாடல்கள் | 330-எதனை நீ எவருக்கு |
எதனை நீ எவருக்கு செய்தாலும் அதனை நீ எனக்கேதான் செய்கின்றாய் எனவே தந்தையின் பேரரசில் உனக்கோர் இடமுண்டு உறுதியிது பசியென்று துடித்தேன் நீ உணவளித்தாய் வசி என்று இடமும் நீ எனக்களித்தாய் எனவே தந்தையின் பேரரசில் உனக்கோர் இடமுண்டு உறுதியிது தாகத்தைத் தீர்க்க நீ நீர் அளித்தாய் சோகத்தை அகற்ற நீ மொழியுரைத்தாய் எனவே தந்தையின் பேரரசில் உனக்கோர் இடமுண்டு உறுதியிது தனிமையில் துவண்டேன் நீ துணைபுரிந்தாய் பிணியினால் நலிந்தேன் நீ மருந்தளித்தாய் எனவே தந்தையின் பேரரசில் உனக்கோர் இடமுண்டு உறுதியிது களைத்துடல் சோர்ந்தேன் நீ ஓய்வளித்தாய் உழைத்துளம் தளர்ந்தேன் நீ உரமளத்தாய் எனவே தந்தையின் பேரரசில் உனக்கோர் இடமுண்டு உறுதியிது |