Horizontal CSS3 Menu Tutorial Css3Menu.com

  இறைவனில் சங்கமம்

  தியானப் பாடல்கள்  329- எத்துணை நன்று என்றும் பேரின்பம்  



எத்துணை நன்று என்றும் பேரின்பம்
இந்த நம் அவனியிலே
அன்பு சமத்துவம் அமைதியில்
நாம் கூடி வாழ்வதிலே (2)

கண்ணுக்கு கண்ணென்றும்
பல்லுக்குப் பல்லென்றும்
வாழ்ந்ததை மறந்திடுவோம் - நம்
அயலாருக்கும் பகைவர் யாவர்க்கும்
அன்பினைப் பொழிந்திடுவோம் (2)
இப்படிச் செய்வதால் விண்ணகத் தந்தையின்
பிள்ளைகள் எனப்படுவோம் - நாம் (2)

பிறப்பால் உயர்ந்தோர் தாழ்ந்தோர்
என்னும் கொடுமை அகற்றிடுவோம்
உழைப்பால் உயர்வோம் உள்ளதைப் பகிர்வோம்
உறவில் வாழ்ந்திடுவோம் (2)
இப்படிச் செய்வதால் விண்ணகத் தந்தையின்
பிள்ளைகள் எனப்படுவோம் - நாம் (2)



 

இன்னல் தீர்த்து நிறை நன்மை சேர்க்கும் செபமாலையை எமக்குத் தந்தாய்