தியானப் பாடல்கள் | 328-எத்தனை காலம் உனக்காக |
எத்தனை காலம் உனக்காக நான் ஏங்கித் தவிப்பேன் இறைவா வா இறைவா - 4 வேறென்ன வேண்டும் விண் விருந்திருக்க விளக்கென்ன வேண்டும் கதிரவனிருக்க உறவென்ன வேண்டும் அருள் மொழியிருக்க - 2 உலகென்ன வேண்டும் உன்னொளியிருக்க - 2 கடலினைக் கேட்டால் கருணையைச் சொல்லும் உடலினைக் கேட்டால் உள்ளத்தைச் சொல்லும் சுடர்தனைக் கேட்டால் சுயவரம் சொல்லும் - 2 படர் நிலவெல்லம் படைத்தவன் கண்ணே - 2 கண்ணொன்று இருந்தால் கர்த்தனைக் காணும் காதொன்று இருந்தால் இறை மொழி கேட்கும் நாவொன்று இருந்தால் நாதனை வாழ்த்தும் - 2 நடப்பவையெல்லாம் படைத்தவன் செயலே - 2 முதலொன்றுமில்லை மேலவன் தவிர முடிவொன்றுமில்லை அவன் செயல் தவிர மழலையும் முதுமையும் அவளது விளக்கம் -2 மறைவிலும் தொடர்வது அவனது தொடக்கம் - 2 |