தியானப் பாடல்கள் | 326-உனக்காக இனி வாழ |
உனக்காக இனி வாழ முடிவெடுத்தேன் ஒருகோடி இடர்பாடு எதுவந்தபோதும் - 2 எனக்காக வாழ்ந்ததெல்லாம் பொய் வாழ்வு என்பதை உன்னருளாலே உணர்ந்ததனால் நான் வாழ்வும் வழியும் ஒளியும் ஆனவர் மாறாத அன்பும் இரக்கமும் உடையவர் - 2 இறைமகன் யேசுவே என் வாழ்வின் மையம் என்றே ஏற்றிட முடிவெடுத்தேன் தீமைகள் பாவங்கள் விலகிடவும் தெய்வீக அன்பினை உணர்ந்திடவும் - 2 இறைவனில் இரண்டறக் கலந்திடவும் இதயத்தின் ஆழத்தில் முடிவெடுத்தேன் இறையருள் இவ்வுலகில் வந்திடவும் எங்கும் சமத்துவம் நிறைந்திடவும் - 2 மறை நூல் வழியில் வாழ்ந்திடவும் மனநிறைவுடனே முடிவெடுத்தேன் |