தியானப் பாடல்கள் | 325-உன்னோடு உறவாடும் நேரம் |
உன்னோடு உறவாடும் நேரம் என் பாடல் அரங்கேற்றம் ஆகும் எந்நாளும் என் வாழ்வில் நீ செய்த நன்மை நாள்தோறும் நான் பாடும் கீதம் பலகோடி பாடல்கள் நான் பாட வேண்டும் மன வீணை உனை வாழ்த்த வேண்டும் ஒளி வீசும் தீபங்கள் நீயாக வேண்டும் இமையோரம் நின்றாட வேண்டும் இதழோர ராகம் உன் ஐpவ கானம் அருட்தேடும் நெஞ்சம் உன் பாத தஞ்சம் மனமே மனமே இறையோடு பேசு கல்வாரி வாக்குகள் வாழ்வாக வேண்டும் வாழ்வே உன் கதியாக வேண்டும் அலை மோதும் எண்ணங்கள் நீயாக வேண்டும் வினை தீர்க்கும் மருந்தாக வேண்டும் மணியோசை நாதம் நான் கேட்ட காலம் வான் தந்த வேதம் தேனாகும் கோலம் உயிரே இறையோடு பேசு |